ரஜினிகாந்த் கலராக இல்லை….ஆனால்.? – பாராட்டிய திருமாவளவன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ன பேசினாலும் அதற்கு எதிராக பேச வேண்டும் என்பதே தற்கால அரசியல்வாதிகளின் குறிக்கோளாக இருந்து வரும் நிலையில் ரஜினியை விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அவர்கள் இன்று நடந்த ஒரு விழாவில் பாராட்டி பேசியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற துக்ளக் ஆண்டு விழாவில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ரஜினிகாந்த் பேசியதாக கூறப்பட்ட பிரச்சனையில் கூட திருமாவளவன் ரஜினியை மென்மையாகவே கண்டித்ததாக கூறப்படுகிறது

இதனை அடுத்து இன்று நடைபெற்ற சினிமா விழா ஒன்றில் கலந்து கொண்ட திருமாவளவன் ’சினிமாவில் கதாநாயகர்கள் கதாநாயகிகள் பளபளப்பான தோல் கொண்டவராக இருக்க வேண்டும் என்ற நிலையை உடைத்தவர் ரஜினிகாந்த் என்றும் ஆளும் கலராக இல்லை, பளபளப்பாகவும் இல்லை ஆனால் அவரது படம் எப்படி ஓடுகிறது என்ற கேள்வியை கேட்க வைத்தவர் ரஜினிகாந்த்’ என்றும் கூறியுள்ளார்

2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகளின் கூட்டணிகள் மாறும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில் திடீரென திருமாவளவன் ரஜினியை புகழ்ந்து பேசி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Published by
adminram