லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம் பெற்ற குட்டிக்கதை பாடல் சில நாட்களுக்கு முன்பு வெளியானது.
இப்பாடல் விஜய் ரசிகர்கள் உட்பட பலரையும் கவர்ந்த நிலையில், தற்போது ஹாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் பில் டியூக் இந்த பாடலை தனது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டி ஒரு பதிவை இட்டுள்ளார். இவர் அர்னால்டு நடித்த கமாண்டோ மற்றும் பிரிடேட்ட ஆகிய படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தவர். மேலும், ஏற்கனவே, முருகதாஸை ஹாலிவுட்டில் வந்து படமெடுங்கள் என அழைப்பு விடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைக்கண்ட விஜய் ரசிகர்கள் விஜயின் படத்தில் இவருக்கும் நடிக்க ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என பதிவிட்டு வருகின்றனர்.
தொடர்ந்து திரைப்பிரபலங்கள்…
ஜன நாயகனை…
கடந்த 15…
பொங்கல் ரிலீஸாக…
நடிகர் ரஜினிகாந்த்…