More

இதுவும் ஒருவகை ஷாப்பிங் தான்: தர்பார் வசன நீக்கம் குறித்து கமல்

கடந்த சில ஆண்டுகளாகவே மாஸ் நடிகர்களின் படங்கள் வெளிவந்தால் அந்த படத்தில் ஏதேனும் ஒரு குற்றம் குறை கண்டுபிடித்து அதற்கு எதிராக குரல் கொடுப்பதும், போராட்டம் நடத்துவதும் ஒரு சிலருக்கு பகுதிநேர வேலையாக உள்ளது

Advertising
Advertising

இந்த நிலையில் சமீபத்தில் வெளிவந்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’தர்பார்’ படத்தில் இடம்பெற்ற ஒரு வசனத்திற்கும் இதே பிரச்சனை ஏற்பட்டது. இந்த படத்தில் ”பணம் இருந்தால் சிறையில் உள்ளவர்களும் ஷாப்பிங் செல்லலாம்” என்ற ஒரு வசனம் காமெடிக்காக வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த வசனம் சசிகலாவை குறிப்பதாக அவரது ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சசிகலாவின் வழக்கறிஞர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த வசனத்தை உடனே நீக்க வேண்டும் என்று கூறினார். இந்த வசனத்தை அவர் நீக்க வேண்டும் என்று கூறியதிலிருந்து சசிகலா ஷாப்பிங் சென்றதை அவர் உறுதி செய்ததாக நெட்டிசன்கள் கேலி செய்தனர்

இந்த நிலையில் இந்த பிரச்சனையை பெரிதாக்க விரும்பாத லைகா நிறுவனம் தர்பார் படத்திலிருந்து அந்த சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்கியது. இதனையடுத்து இந்த படத்தின் சர்ச்சைக்குரிய வசனம நீக்கியது குறித்து நேற்று பேட்டி ஒன்றில் கமலஹாசன் கூறியபோது ’பராசக்தி காலத்தில் இருந்தே கருத்துரிமை பிரச்சினை உள்ளது, தர்பார் படத்தில் சர்ச்சை வசனம் நீக்கப்படுவதும் ஒரு ஷாப்பிங்தான் என்று கூறியுள்ளார். 

Published by
adminram