தமிழகத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் தாக்கிப் பேசியுள்ளார்.
தமிழகத்தின் நிதிநிலை அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு தமிழரின் மீதும் ரூ 57,000 கடன் உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதையடுத்து அதிமுக அரசு மீது விமர்சனம் எழுந்துள்ள நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனோ திமுக,அதிமுக என இருக் கட்சிகளையும் விமர்சனம் செய்துள்ள்ளார்.
அவரது சமூக வலைதளப்பக்கத்தில் ‘தமிழகத்தின் ஆண், பெண் குழந்தைகள் மற்றும் இனி பிறக்கவிருக்கும் பிள்ளைகள் என ஒவ்வொருவரின் தலையிலும் சுமார் ரூ.57,000/ ரூபாய் கடன் சுமை இன்றைய தேதி வரை ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது. இதன் முக்கிய காரணங்கள், மாறி மாறி சுரண்டி வரும் இரு கழகங்களே. இவர்களை அகற்றுவோம். தமிழக வருமானத்தைக் கூட்டுவோம். கடனில்லாத் தமிழகத்தை உருவாக்குவோம். மக்கள் கைகோர்த்தால் நீதி கிடைக்கும். ’ எனத் தெரிவித்துள்ளார்.
எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக…
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…