அட இது நல்லாருக்கே… மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்த சூப்பர் சலுகை!

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிகள் பயன்பெறும் விதமாக பயணிகள் தங்கள் சைக்கிளை எடுத்துச் செல்லலாம் என அறிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிகளைக் கவர்வதற்காக நிறைய அறிவிப்புகளைக் கடந்த காலங்களில் வெளியிட்டுள்ளது. அதுபோல இப்போது பயணிகள் தங்கள் சைக்கிளை தங்களோடு ரயிலில் எடுத்து செல்லலாம் என அறிவித்துள்ளது.

ஆனால் சைக்கிள் சிறியதாகவும், கையில் எடுத்துச் செல்ல வசதியாகவும் இருக்க வேண்டும். பயணிகள் யாருக்கும் இடையூறு ஏற்படுத்தாமலும் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரயிலில் இருந்து இறங்கி வீட்டுக்கு அல்லது அலுவலகத்துக்கு செல்வதற்கு ஏதுவாக இதுபோன்ற வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் பயணிகளின் ஆட்டோ செலவு மிச்சமாகும் எனத் தெரிகிறது.

Published by
adminram