இந்நிலையில், கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் மார்ச் 31ம் தேதி வரை திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. மேலும், படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா பீதி எப்போது முடிவடைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி மக்கள் திரையரங்குகளுக்கு வருவார்கள் என்பது தெரியவில்லை. எனவே, திட்டமிட்டபடி மாஸ்டர் திரைப்படம் வெளியாகுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும் இப்படத்தின் டிரெய்லரை இம்மாதம் 21ம் தேதி இப்படத்தின் டீசர் வீடியோவை வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. விஜய் படங்கள் எப்போதும் டீசரோடு பட தேதியும் அறிவிக்கப்பட்டு விடும். ஆனால், கொரோனா பாதிப்பு சரியாகவில்லை எனில், பட ரிலீஸ் தள்ளிக் போக வாய்பிருக்கிறது. எனவே, கூறியபடி படத்தை வெளியிட முடியாமல் போகும். எனவே, 21ம் தேதி டீசரையும், அதன்பின் சில பாடல்களையும் வெளியிட்டு விட்டு விட்டு, ஏப்ரல் மாதம் சூழல் எப்படி மாறுகிறது என்பதற்கு ஏற்றால்போல் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'ஒண்ணே ஒண்ணு…
டைட்டிலைப் பார்த்ததுமே…
Kollywood: கோலிவுட்டை…
தனுஷ் இயக்கத்தில்…
Sivakarthikeyan: விஜய்…