இறுதிச்சுற்று திரைப்படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் சூரரைப் போற்று. சொந்தமாக விமான நிறுவனம் வாங்கும் கனவை கொண்ட உண்மைக்கதையை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசர் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற தீம் மியூசிக் டிராக்கை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இப்ப வந்து மோதுடா… கிட்ட வந்து பாருடா என்ற அந்த பாடலை நடிகர் சூர்யாவே பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
ரஜினியின் 173-வது…
சமீபத்தில் சிவகார்த்திகேயன்…
துள்ளுவதோ இளமை…
தமிழ் சினிமாவில்…
நாம் எதேச்சையாக…