பாரதிராஜாவிடம் சீன் போட்ட சுந்தரராஜன்... என்ன சொல்றதுன்னு தெரியாம திணறிய பாக்கியராஜ்;..!
பாக்கியராஜ், ர்.சுந்தரராஜன் இருவரும் நெருங்கிய நண்பர்கள். எப்படின்னா ரெண்டு பேருமே ஒண்ணா படிச்சவங்க. சுந்தரராஜன் கிட்ட வீட்டுல கேட்டாங்களாம். 'உங்க ப்ரண்ட்ஸ் எல்லாம் சினிமாவுல இருக்காங்க.
நீங்களும் தான் இருக்கீங்களே...'ன்னு திரி ஏத்தி விட்டாங்களாம். இதுக்கு மேல நாம சும்மா இருந்தா நல்லாருக்காதுன்னு நினைச்ச சுந்தரராஜன் பாக்கியராஜ் கிட்ட போய் விவரத்தை சொல்றாரு. உடனே நம்ம கூட படிச்ச பையன்.
ஒண்ணா சேர்த்துக்கறாரு. ஒரு நாள் பாக்கியராஜ், சுந்தரராஜன்கிட்ட சொல்றாரு. 'இப்ப டைரக்டர் வருவாரு. வந்தா வணக்கம் மட்டும் சொல்லு. வேற எதுவும் பேசிராத. குளிச்சிட்டு வந்துடறேன்'னுட்டு போறாரு. அப்போ கரெக்டா பாரதிராஜாவும் வந்துடறாரு.
அப்போ டைரக்டர் வெளியே நிக்கிறாரு. சுந்தரராஜன் உள்ளே இருக்காரு. பாக்கியராஜ் குளிச்சிட்டு வெளியே வர்றாரு. உடனே பாரதிராஜாவைப் பார்த்ததும் 'சார் என்ன சார் நீங்க வெளியே நிக்கறீங்க..?'ன்னு கேட்கிறார். அதுக்கு பாரதிராஜா, யோவ் எவன்யா இவன்? எனக்கே சீன் சொல்றான். நான் யாருன்னு தெரியுமா அவனுக்குன்னு கோபத்துல கேட்குறார்.
அப்புறம் தான் தெரிஞ்சது. சுந்தரராஜன் நீங்க அந்தப் படத்துல சீனை அப்படி வச்சிருக்கலாமேன்னு திறமையோட பேசிருக்காரு. அதான் டைரக்டர் எவன்னே தெரியாதவன் எனக்கு சீன் சொல்றானேன்னு கோபத்துல கௌம்பி வெளியே போயிருக்காரு.
அடடா கைக்கு எட்டியதை வாய்க்கு எட்டாம ஆக்கிட்டானேன்னு நினைச்ச பாக்கியராஜ், பாரதிராஜாவிடம் சமாளித்துள்ளார். இல்ல சார். எங்க ஊரு பையன். நல்ல திறமையான ஆளு. அசிஸ்டண்ட்டுக்கு சேர்த்துக்கலாம்னு தான் பார்த்தேன்.
நம்மக்கிட்ட ஆள் இல்லையேன்னு தான் வரச் சொன்னேன்னு பாக்கியராஜ் சொல்றாரு. இவன் பேசறதே சரியில்ல... இவன எனக்கு அசிஸ்டண்ட்டா போடச் சொல்றியான்னு கோபத்தில் கத்துறார். அப்புறம் பாக்கியராஜ் கெஞ்சி கூத்தாடி ஒருவழியா சுந்தரராஜனுக்கு வேலையை வாங்கிக் கொடுத்துடறாரு.
அப்புறம் அவரும் தன்னோட திறமையால வைதேகி காத்திருந்தாள், மெல்லத் திறந்தது கதவு, ராஜாதி ராஜா, அம்மன் கோவில் கிழக்காலே, காலமெல்லாம் காத்திருப்பேன்னு பல சூப்பர்ஹிட் படங்களை இயக்கி சினிமாவுல சாதிச்சிடுறாரு.
நண்பனையும் தன்னைப் போல பெரிய ஆளா ஆக்கணும்னு ஆசைப்பட்ட பாக்கியராஜ் தான் இந்த இடத்தில ரியல் ஹீரோவா ஜொலிக்கிறார். இதுல என்ன பியூட்டின்னா மூவருமே ராஜாக்கள் தான். பாரதிராஜா, பாக்கியராஜ், சுந்தரராஜன்.. பெயரிலேயே எவ்வளவு பொருத்தம்னு பார்த்தீங்களா?