’மாஸ்டர்’ படத்திற்காக விஜய் இதுவரை செய்யாத விஷயம்!
தளபதி விஜய் நடித்து வரும் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஷிமோகாவில் முடிவடைந்த நிலையில் சென்னையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு வரும் திங்கள் முதல் நடைபெற உள்ளது. இந்த படப்பிடிப்பில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர்
இந்த நிலையில் விஜய் இதுவரை எந்த படத்திலும் செய்யாத ஒரு விஷயத்தை ’மாஸ்டர்’ படத்திற்காக செய்து உள்ளதாக படக்குழுவினர்களிடமிருந்து தகவல்கள் கசிந்துள்ளன. விஜய் இதுவரை எந்த படத்திலும் மீசை இல்லாமல் மொழுமொழு முகத்துடன் நடித்ததே இல்லை. சுறா படத்தில் கூட லேசான மீசை, தாடி இருக்கும். ஆனால் ’மாஸ்டர்’ படத்தில் மீசை தாடி எதுவுமே இல்லாமல் விஜய் ஒருசில காட்சிகளில் நடித்துள்ளதாகவும் இந்த காட்சிகள் சிறைச்சாலையில் படமாக்கபட்டதாகவும் செய்திகள் கசிந்துள்ளது. மீசையில்லாமல் விஜய் இருக்கும் காட்சி எப்படி இருக்கும் என்பதை ’மாஸ்டர்’ திரைப்படம் வெளிவந்த பின்னர் தான் கூறமுடியும்
இந்த நிலையில் சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுவியோவில் ’மாஸ்டர்’ படத்திற்காக போலீஸ் ஸ்டேஷன் செட் ஒன்று போடப்பட்டு இருப்பதாகவும் இதில் தான் கிளைமாக்ஸ் சண்டை காட்சி படமாக்கப்பட இருப்பதாகவும், விஜய்-விஜய்சேதுபதி மோதும் ஒரே சண்டை காட்சியான இந்த சண்டைக்காட்சி அதிரடி ஆக்ஷன் விருந்தாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது