More

லைட்களை ஆப் செய்ததால் நடந்த நன்மை இதுதான்! – அமைச்சர் தகவல்

மோடியின் வேண்டுகோளை ஏற்று நேற்று பெரும்பாலான நாட்டு மக்கள் தங்கள் வீடுகளிலும் மாடிகளிலும் விளக்குகளை ஏற்றி வைத்தனர். ஆனால் சில இடங்களில் விரும்பத்தகாத சில நிகழ்வுகளும் நடந்துள்ளன. பொது இடங்களில் தீப்பந்தங்களோடு ஒன்று கூடி கோஷமிடுதல், பட்டாசுகளை வெடித்தல் போன்றவற்றை மக்கள் செய்ததன் மூலம் சமூக இடைவெளியைப் பின்பற்றவில்லை என்பது கண்கூடாக தெரிந்தது. இதனால் சமூக வலைதளங்களில் கொரோனா பரவும் அபாயம் உள்ளதாக கண்டனங்கள் எழுந்துள்ளன.

Advertising
Advertising

இந்நிலையில் 9 நிமிட மின் விளக்குகள் அணைப்பால் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 2200 மெகா வாட் மின்சாரம் மிச்சமாகியுள்ளதாகவும், சென்னையில் மட்டும் 350 மெகா வாட் மின்சாரம் மிச்சமாகியுள்ளதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

Published by
adminram

Recent Posts