மலையாள நடிகரான கலாபவன் மணி தமிழிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2016ம் ஆண்டு திருச்சூர் மாவட்டம் சாலக்குடியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்து மரணம் அடைந்தார். அவரது மரணம் கேரளவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது கணவர் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவரின் மனைவி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
பிரேத அப்ரிசோதனை முடிவில் அவரது உடலில் எத்தில் ஆல்கஹால் இருந்ததும், கிரிமி நாசினி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், ஹைதராபாத்தில் உள்ள மத்திய ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் வேறுமாதிரி இருந்தன. எனவே, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், 32 பக்க விசாரணை அறிக்கையை கேரள நீதிமன்றத்தில் சிபிஐ இன்று தாக்கல் செய்தது. அதில், கல்லீரல் பாதிக்கப்பட்டு இருந்ததால்தான் அவர் மரணமடைந்தார் எனவும், பச்சை காய்கறிகளை அவர் தொடர்ந்து சாப்பிட்டு வந்ததால் அவரது உடலில் க்ளோர்பைரிபோஸ் என்கிற பூச்சுக் கொல்லி கலந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கலாபவன் மணியின் மரணத்தில் இருந்த மர்மம் விலகியுள்ளது
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…