கெட்டப்ப பாத்து தப்பு கணக்கு போடாதீங்க... 'ராயன்' படத்தில தனுஷ் இப்படி ஒரு கேரக்டர்ல நடிக்கிறாரா!...
தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் கலக்கி வரும் தனுஷ் கையில் ஏகப்பட்ட திரைப்படங்களை வைத்திருக்கின்றார். இதற்கு இடையில் இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் படங்களையும் இயக்கி வருகின்றார். இவர் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்திருந்தது.
அருண் மாதேஷ் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் முழுக்க முழுக்க சுதந்திர போராட்ட கதைக்களத்தை கொண்டதாக இருந்தது. இதைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் தனது ஐம்பதாவது படம் தொடர்பான தகவலை வெளியிட்டார். இந்த திரைப்படத்தை தானே இயக்கி நடிக்க இருப்பதாக கூறியிருந்தார். இதன் படத்திற்கு ராயன் என்று பெயர் வைக்கப்பட்டது.
ஏ ஆர் ரகுமான் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை சன் பிக்சர் நிறுவனம் தயாரிக்கின்றது. மேலும் இந்த திரைப்படத்தில் ஏகப்பட்ட பிரபலங்கள் நடிக்கிறார்கள். தனுசுடன் சேர்ந்து சந்திப் கிஷன், அபர்ணா, துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், எஸ் ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ், செல்வராகவன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் இந்த திரைப்படம் வருகிற 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை பார்த்த சென்சார் குழு ஏ சர்டிபிகேட் கொடுத்திருக்கின்றது. முதலில் இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகிய சமயத்தில் நடிகர் தனுஷ் கையில் கத்தியுடன் வித்தியாசமான கெட்டப்பில் இருந்தார்.
இதை பார்த்து ரசிகர்கள் பலரும் ஒரு ரவுடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்று கூறி வந்த நிலையில் இந்த திரைப்படத்தில் அண்டர் கோப்பாக நடித்திருக்கின்றார். அதாவது ரகசிய உளவாளியாக நடித்திருப்பதாக கூறப்படுகின்றது. இந்த தகவல் உண்மையா, பொய்யா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தையும் இயக்கி வருகின்றார். தமிழ் சினிமாவில் முதன்முதலாக பவர் பாண்டி என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக சினிமாவில் தன் பயணத்தை தொடங்கிய இவர் தொடர்ந்து இயக்கத்தில் கவனம் செலுத்தி வருகின்றார்.