More

மெர்சல் நஷ்டத்திற்கும் ‘தனுஷ் 44’ படத்திற்கும் உள்ள சம்பந்தம் இதுதான்

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த ’மெர்சல்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதாக கூறப்பட்டது. இந்தப் படம் ரூ 200 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்ட போதிலும் இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டது என்பது தான் உண்மை 

Advertising
Advertising

இதனை அடுத்து தேனாண்டாள் நிறுவனம் தயாரித்து வந்த மற்ற திரைப்படங்கள் அனைத்துமே நிறுத்தப்பட்டன. அவற்றில் ஒரு படம்தான் தனுஷ் நடித்து இயக்கிய ஒரு படம். இந்த படத்தின் 30 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்ட பின்னர் இந்த படத்தில் தனுஷ் தனது சொந்த காசை போட்டு சில மாதங்கள் படப்பிடிப்பு நடத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் இந்த படத்தை தொடரும் நிலையில் தற்போது ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் இல்லை என்பதால் இந்த படத்தை அப்படியே சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாகவும், அந்தப் படம்தான் தனுஷ் 44’ என்று நேற்று வெளிவந்த அறிவிப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது

எனவே தனுஷ் படத்தின் இயக்குனர் தனுஷ் தான் என்பதும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று சன்பிக்சர்ஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. மெர்சல் படத்தின் நஷ்டம் காரணமாக கைவிடப்பட்ட படங்களில் ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றி அதனை தொடர உள்ளது என்பதுதான் கோலிவுட்டின் தற்போதைய ஹாட் டாக் ஆகும்.

Published by
adminram

Recent Posts