
கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘மாஸ்டர்’. இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. இப்படத்தின் படப்பிடிப்ப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இத்திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இப்படம் ரூ.200 கோடி வியாபாரத்தை தொட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமே தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளது.
விஜய் நடித்த திரைப்படங்களில் மாஸ்டர் படமே அதிக வியாபாரத்தை தொட்டுள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.
#ThalapathyVijay in #Master Business Crossed 200CR Highest Business of #ThalapathyVijay ❤ @XbFilm @MasterMovieOffi pic.twitter.com/zf4SCEYl1z
— XB Film Creators (@XbFilm) January 18, 2020