அஜித்துக்கு இவ்வளோ தங்க மனசா?… அது என்ன விழா தெரியுமா?….

தல என ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் நடிகர் அஜித் எந்த சினிமா நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதில்லை. சமீபத்தில்  வலிமை படத்தில் நடித்து வந்த போது காயம் அடைந்ததாகவும் செய்திகள் வெளியானது. இதனால் அவரின் ரசிகர்கள் பதறிப் போயிருந்தனர்.

இந்நிலையில், இன்று காலை திடீரெனெ கோட் சூட் அணிந்து ஒரு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. ஏற்கனவே வலிமை அப்டேட் கிடைக்காத வருத்தத்தில் இருந்த ரசிகர்கள் அவரின் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.

தற்போது அந்த நிகழ்ச்சிக்கான பின்னணி தெரியவந்துள்ளது. அவரிடம் பணிபுரியும் சுரேஷ் சந்திராவின் சகோதரி மகள் திருமண விழா என்பது தற்போது தெரியவந்துள்ளது. தனது குடும்ப விழா போல் வாசலில் நின்று விழாவிற்கு வந்தவர்களை அவர் வரவேற்ற வீடியோவும் வெளியானது.  இந்த விழாவில் ஷாலினியும் கலந்து கொண்டார். இதைக்கண்ட நெட்டிசன்கள் தலை இவ்வளவு எளிமையானவரா என பாராட்டி வருகின்றனர்.

Published by
adminram