சச்சின் தேடிய நபர் இவர்தான் – ஆனா அவர் ஆசையை பாருங்க!

சச்சின் தெண்டுகல்கர் இந்திய அணிக்காக விளையாடிக் கொண்டிருந்த போது ஒருமுறை சென்னை வந்திருந்தார். அப்போது அவர் பிரபல தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் தங்கியிருந்தார். அப்போது, அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் Elbow Guard பற்றி அவருக்கு சில அறிவுரைகளை கூறினார். அதன்பின், அதைப்போலவே சச்சினை தனது Elbow Guard-ஐ வடிவமைத்தார். இதை சச்சின் சில பேட்டிகளிலும் கூறியுள்ளார்.

இந்நிலையில், எதிர்பாராத சந்திப்புகள் சில சமயம் மறக்க முடியாத தருணங்களாக மாறுகின்றன. சென்னை டெஸ்ட் தொடரின் போது Taj Coromandel ஊழியர் ஒருவர் என்னுடைய Elbow Guard பற்றி கூறிய ஆலோசனைக்குபின் அதன் வடிவத்தை மாற்றினேன். அவரை சந்திக்க ஆசைப்படுகிறேன், கண்டுபிடிக்க எனக்கு நீங்கள் அனைவரும் உதவ வேண்டும்’ என அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சச்சின் இப்படி தமிழில் டிவிட் செய்திருப்பது நெட்டிசன்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

Published by
adminram