இது மரண மாஸ்! தர்பார் பின்னணி இசையை வாசிக்கும் அனிருத் - வீடியோ வெளியிட்ட முருகதாஸ்

f05478df89abe5e15980de5987ce34aa

ஏ.ஆர்.முருததாஸ் தற்போது ரஜினியை வைத்து தர்பார் திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளார். பல வருடங்களுக்கு பின் இப்படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். பொங்கலுக்கு வெளியாகவுள்ள இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்திற்கான பின்னணி இசை வேலை தற்போது அனிருத் ஸ்டுடியோவில் நடந்து வருகிறது.

இந்நிலையில், தர்பார் பட காட்சிகளுக்கு அனிருத் இசைக்கோர்க்கும் காட்சிகளை முருகதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு ‘அனிருத் இசைக்கு தயாராக இருங்கள். தர்பார் படத்தின் பின்னணி இசைப்பணி மும்முரமாக நடந்து வருகிறது’ என பதிவிட்டுள்ளார்.

Related Articles
Next Story
Share it