More

இதுதான் மீடியா மாஃபியா! மன்னிப்பு கேட்கும் வரை விட மாட்டேன் – திரௌபதி இயக்குனர் காட்டம்

எனவே, சில சமூகத்தை சேர்ந்த பிரிவினர் இப்படத்தை ஆதரித்தும், சிலர் அதை எதிர்த்தும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதேநேரம் பட ஊடகங்கள் இப்படத்திற்கு எதிரான விமர்சனங்களையே அளித்துள்ளது. இயக்குனர் மோகன் பேட்டி கொடுக்க செல்லும் இடமெல்லாம் கேள்விக்கனைகளை தாங்க முடியாமல் அவர் கோபப்பட்டு பேசுவது வாடிக்கையாகி வருகிறது.

இந்நிலையில், கலாட்டா இணையதளத்தில் மோகன் பேட்டி கொடுக்க சென்றார். அப்போது நெறியாளர் அவரை மடக்கி மடக்கி கேள்விகளை கேட்க ஒரு கட்டத்தில் கோபமடைந்த அவர் என்னை கேள்வி கேட்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை எனக்கூறி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

இந்த தகவலை அந்த இணையதளம் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தது. இதைக்கண்டு கோபமடைந்த மோகன் ‘ கலாட்டா இணையதளம் நேற்று ரெளபதி திரைப்படம் சம்மந்தமாக எடுத்த நேர்காணலில் நான் walked out செய்ததாக குறிப்பிட்டு யாரையோ திருப்தி படுத்த முயற்சி செய்திருக்கிறார்கள்.. நேர்காணல் செய்த விக்ரமன் என்பவரின் கேவலமான செயல் இது’ என பதிவிட்டுள்ளார்.

Advertising
Advertising

மேலும், ‘அவர் எனக்கு நன்றி சொல்ல நானும் பதிலுக்கு நன்றி கூறி முடிந்த நேர்காணலை இப்படி சித்தரித்து மீடியா மாஃபியா என்றால் என்ன என்று தெளிவாக வெளிப்படுத்தி உள்ளார்கள்.. அவர்கள் மன்னிப்பு கேட்கும் வரை இதை விடுவதாக இல்லை’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Published by
adminram

Recent Posts