சூர்யா வெற்றிமாறன் இணையும் படத்தின் பெயர் இதுதான் – ஜல்லிக்கட்டு கதைக்களம் !

சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் படத்துக்கு வாடிவாசல் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அசுரன் வெற்றிக்குப் பிறகு சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்குனர் வெற்றி மாறன் இயக்க இருக்கிறார். அதன் பிறகு அவர் சூர்யா நடிப்பில் தாணு தயாரிக்கும் படத்தை இயக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. தொடர் தோல்விகளால் துவண்டுள்ள சூர்யா இந்த படத்தின் மூலம் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரிசையாக நாவல்களை வைத்து திரைப்படம் எடுத்து வரும் வெற்றிமாறன், இந்த முறையும் ஒரு நாவலைதான் திரைப்படமாக எடுக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. எழுத்தாளர் சி சு செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலை ஒட்டி ஜல்லிக்கட்டு சம்மந்தப்பட்ட திரைக்கதையைதான் அவர் எழுதியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து வாடிவாசல் என்ற பெயரையே அந்த படத்துக்கு வைத்துள்ளதாக சமீபத்தில் வெற்றிமாறன் ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

இதனையடுத்து வாடிவாசல் என்ற அந்த நாவலைப் பற்றி பலபேர் தேட ஆரம்பித்துள்ளனர்.

Published by
adminram