கொரோனாவுக்கு பின் சினிமா தத்தளிக்காமல் இருக்க பெரிய ஹீரோக்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தங்கள் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என மணிரத்னம் தெரிவித்துள்ளார்.
கொரோனாவுக்கு பின்னர் இரண்டு மாதங்களாக சினிமா படப்பிடிப்புகள் நடத்தப்படவில்லை. மேலும் திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து கொரோனாவுக்குப் பின்னர் சினிமாவின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்ற தலைப்பில் நடந்த வெபினோர் தொடர் கலந்துரையாடலில் இயக்குனர் மணிரத்னம் பேசினார்.
அப்போது ‘கொரோனா தாக்கத்தால் இனி குறைந்த பட்ஜெட்டில் அதிக படங்கள் உருவாகும். இப்போதைக்கு தியேட்டர் வெளியீடு சாத்தியம் இல்லை என்பதால் படங்களின் பட்ஜெட் குறைக்கப்படவேண்டும். இதற்கு குறிப்பாக பெரிய நட்சத்திரங்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் நிலைமையை புரிந்துகொண்டு தங்கள் சம்பளத்தை குறைத்துக்கொண்டால், திரையுலகம் இக்கட்டான சூழலில் இருந்து வெளிவரும்’ எனக் கூறியுள்ளார்.
கங்குவா படத்தின்…
Director Atlee:…
பேய்ப்படங்களைப் பார்ப்பது…
நானும் விஜய்…
நடிகர் நாகார்ஜுனாவின்…