Categories: latest news

எனக்கே ஸ்கெட்சா… மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நயன் நடிக்க ஓகே சொன்னதுக்கு இதான் காரணமா?

நடிகை நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக நேற்று அறிவிப்பு வெளியான நிலையில் இந்த திடீர் அறிவிப்பு பின்னர் பல சுவாரஸ்ய தகவல்கள் இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் ஒரு கிசுகிசுக்கள் கிளம்பி இருக்கிறது.

வேல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். இப்படத்தை ஆர்.ஜே பாலாஜி மற்றும் என்.ஜே சரவணன் ஆகியோர் இயக்கியிருந்தனர். இப்படத்தில் மூக்குத்தி அம்மன் ஆக நடிகை நயன்தாரா நடித்திருப்பார். ஆர்.ஜே பாலாஜி, ஊர்வசி, மௌலி உள்ளிட்டோர் முக்கிய இடத்தில் நடித்திருந்தனர்.

இந்நிலையில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க ஆர்.ஜே.பாலாஜி திட்டமிட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அப்போதே நயன் இரண்டாம் பாகத்தில் நடிக்க மாட்டார் அவருக்கு பதில் வேறொரு முக்கிய நடிகையை பாலாஜி நடிக்க வைக்க திட்டமிட்டு இருக்கலாம் எனவும் கிசுகிசுக்கள் வந்தது.

இதைத்தொடர்ந்து அம்மனாக நடிகை திரிஷாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரிக்கவில்லை என்பதால் ஆர் ஜே பாலாஜி இயக்கும் படத்திற்கு மாசாணி அம்மன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை அடுத்த வருடம் திரைக்கு வரவும் படக்குழு மும்முரமாக இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் நடிகை நயன்தாரா ஏற்கனவே தொடர்ந்து பன்னிரெண்டுக்கும் அதிகமான திரைப்படங்களில் ப்ளாப் வாங்கி விட்டார். கோலிவுட்டில் அவர் மார்க்கெட் பெரிதாக அடிபட்டு இருக்கிறது. தற்போது அவரின் ஒரு படத்தில் திரிஷா நடித்து விட்டால் அது அவருக்கு இன்னும் பெரிய இழப்பாக கூடும் என நெருங்கியவர்கள் ஏற்றிவிட்டுள்ளனர்.

இதை எடுத்து ஐசரி கணேஷின் கூட்டணியுடன் மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தில் அறிவிப்பை படுவிரைவாக படக்குழு வெளியிட்டு இருக்கிறது. இன்னும் இப்படத்தின் இயக்குனர் யார் என்று முடிவு செய்யப்படவில்லை. முன்னணி இயக்குனரை இப்படத்திற்குள் கொண்டு வரவும் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

ராம் சுதன்

Recent Posts

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

2 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

15 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

15 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

16 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

17 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

23 hours ago