பாடகர் எஸ் பி பாலசுப்ரமண்யத்துக்கு எக்மோ எனப்படும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி உடல் நிலை சரியில்லாமல் சோர்வாக இருப்பதை உணர்ந்ததுடன் லேசாக சளி மற்றும் விட்டு விட்டு காய்ச்சல் இருந்து வந்ததால் கொரோனா பரிசோதனை எடுத்து பார்த்தபோது தான் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு எம்ஜிஎம் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ” பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும் இதனால் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாசம் வழங்கப்படும் நிலையில் உள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். ஆனால் அவர் உடல் சீராக உள்ளதாக அவரின் மகன் எஸ் பி சரண் தெரிவித்தார்.
இந்நிலையில் அவருக்கு மருத்துவமனையில் எக்மோ எனும் ரத்தத்தை சுத்தப்படுத்தும் சிகிச்சை அளிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த சிகிச்சை முறையில் Extracorporeal Membrane Oxygenation எனப்படும் கருவி மூலமாக ரத்த சுத்திகரிப்பு செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த கருவி இதயம் மற்றும் நுரையீரலுக்கு உரிய ரத்தம் செல்வதை உறுதிப்படுத்துகிறது.
தளபதி 69…
சூர்யா அடுத்து…
சர்தார் 2…
தனுஷ், ஐஸ்வர்யா…
துல்கர் சல்மான்…