இது எப்போ?.. மேடையில் நடனமாடிய தல அஜித்….வைரலாகும் வீடியோ

Published on: February 27, 2020
---Advertisement---

6b85c5ac762225eaa59df5383b05da27-2

நடிகர் அஜித் கடந்த சில வருடங்களுக்கு முன்பெல்லாம் திரைப்பட விழாக்களில் தவறாமல் கலந்து கொண்டார். மேடையில் ஏறி ரசிகர்களிடம் பேசுவார். பேட்டி கொடுப்பார். தற்போது இவை எவற்றையும் அவர் செய்வதில்லை. சினிமா படப்பிடிப்பு தவிர வேறு எங்கும் அவர் கலந்து கொள்வதில்லை.

இந்நிலையில், சினிமா விழா தொடர்பான ஒரு மேடையில் அவர் ரசிகர்கள் முன்பு பேசியதும், ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவர் நடனாமாடியதும் தற்போது வீடியோவாக வெளிவந்துள்ளது. ஏறக்குறைய 15 வருடங்களுக்கு முன்பு இந்த விழா நடந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த விழாவில் பேசும் அஜித் ‘ரொம்ப பந்தா பண்ண விரும்பல’ என பேசுகிறார். எனவே, அஜித் ரசிகர்கள் ‘இதுதான் எங்கள் தல’ எனக் கூறி வருகின்றனர். 

Leave a Comment