கொரோனா 2 வது அலை சுழற்றி சுழற்றி அடித்துக்கொண்டிருக்கிறது. இதில் சினிமா நடிகர்கள் மட்டும் விதிவிலக்கல்ல. சமீபத்தில் ஜி.வி.பிரகாசுடன் வாட்ச்மேன், ஜெயம் ரவியின் கோமாளி, வருணுடன் பப்பி ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நடிகை சம்யுக்தா ஹெக்டே. இவருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதியாகி விட்டதாம். தொடர்ந்து தனிமையில் இருந்து சிகிச்சை எடுத்து வருகிறார். கடந்த மாதம் இவரது பெற்றோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது,
சம்யுக்தா வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், எனக்கு தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளது. ஆனாலும் சுவை, வாசனை உணர்வை இழந்துள்ளேன். சோர்வாக உள்ளது. நான் யாருடைய உதவியும் இல்லாமல் இருக்கிறேன். என்னை அதிகமாக நேசிப்பவர்களை இழந்து விடுவேனோ என்று பயமாக உள்ளது.
மரணபயம் மிகக் கொடுமையிலும் கொடுமை. அப்பா, அம்மாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். எவ்வளவு அந்தஸ்து, பணம், உறவு என இருந்தாலும் நோய் வந்துவிட்டால், உதவியற்றவர்களாகவே உணர்கிறோம். நான் தனிமையில் எனது அறையில் அடைபட்டு அழுதுகொண்டே இருந்தேன். இவ்வளவு ஏன்…என் அம்மாவைக் கூட என்னால் கட்டிப்பிடிக்க முடியவில்லை.
நிறைய பேர் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதில்லை. நல்ல உடற்பயிற்சி, உணவுப்பழக்கம் இருந்தாலே போதும். நோய் எதிர்ப்புசக்தி அதிகமாகும்.
தமிழ் திரையுலகில்…
ஒரு நடிகர்…
நடிகர் ஜீவா…
இந்த பொங்கல்…
முருங்கைக்காய் என்றாலே…