அன்பே சிவம் படத்துக்கு வசனம் எழுதுனதே அதுக்குத் தானாம்... அதானே...! சம்பந்தமே இல்லாம எப்படி என்ட்ரி ஆனாரு?
கமல் நடிப்பில் இன்று வரை ரசனையுடன் பேசப்படும் டாப் 10 படங்கள் என்று எடுத்துக் கொண்டால் அதில் அன்பே சிவம் நிச்சயமாக இடம்பிடிக்கும். இந்தப் படத்தை இயக்கியவர் சுந்தர்.சி. படத்திற்கு வசனம் எழுதியவர் பிரபல கார்டூனிஸ்ட் மதன். படத்தில் அவர் தனது வித்தைகளையும் காட்டியிருப்பார். இந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா...
கமல் கட்சியை ஆரம்பித்தது பற்றி அபிப்ராயமே கிடையாது. சமுதாயத்துல ஏதாவது மாற்றங்கள் பண்ணனும். படங்கள் மூலமாவே சொல்லிக்கிட்டு இருக்கோம். இந்தியன் தாத்தாவா ரியல் லைப்லயும் கொஞ்சம் ஆகணும்னு ஒரு நினைப்பு இருந்துருக்கலாம்.
சினிமா எனக்கு இரண்டாம்பட்சம் தான். பத்திரிகை தான் பிடிக்கும். கமல் அன்பே சிவம் எழுதுங்கன்னு ஆர்வம் ஊட்டி எழுத வைத்தார். உங்களால முடியும். நீங்க டிரை பண்ணுங்கன்னாரு. அதனால தான் எழுதுனேன். மற்ற இடத்துல இப்படி ஒரு என்கரேஜ்மெண்ட் இருக்குமாங்கறது கேள்விக்குறி.
இவரு என் கூடவே இருந்து வழிகாட்டினாரு. காட்சி எப்படி எல்லாம் வரணும்னு சொல்லிக்கொடுத்தாரு. கார்டூனிஸ்ட், திரை விமர்சகர் மாதிரி திரைக்கதை எழுத்தாளரும் இருக்கட்டுமேன்னு பண்ணினது தான் அது. அதை மட்டும் விட்டு வைக்கணுமான்னு தான். வேற எதுவும் இல்ல.
அதுக்கு அப்புறம் காஞ்சிவரம் என்ற படத்துக்கு நான் தான் டயலாக் எழுதுனேன். அது ஜனங்களுக்காக எடுக்கல. அவார்டுக்காக எடுத்தது. அவார்டு வாங்கிடுச்சு. மத்திய அரசு விருது பெற்றது. நல்ல மெசேஜ் அதுல இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நாளைய இயக்குனர்கள் நிகழ்ச்சியில் விஜய் டிவி, கலைஞர் டிவியில் பங்கேற்றார் மதன். ஆனந்தவிகடன் பத்திரிகையில் துணை ஆசிரியராக பணியாற்றினார். கார்டூன்கள் வரைவதில் கில்லாடி. நீண்ட காலமாக மதன் டூன் வரைந்தார். 'ஹாய் மதன்' என்று கேள்வி பதில்களும் எழுதினார். ஜெயா டிவியில் மதன் டாக்கீஸ் நிகழ்ச்சியில் திரை விமர்சனம் செய்தார். இவர் புத்தகங்களும் எழுதியுள்ளார். அவற்றில் மனிதனின் மறுபக்கம், வந்தார்கள், வென்றார்கள், கிமு கிபி, மனிதனுக்குள்ளே ஒரு மிருகம், ஹாய் மதன், காதல் வாழ்க ஆகியவை குறிப்பிடத்தக்கவை.