கஷ்டப்பட்டு நடிச்சு சேர்த்த காசு இப்படிப் போச்சே! – அனுஷ்காவுக்கு இந்த நிலைமையா?

Published on: February 3, 2020
---Advertisement---

72f08d42db48dfa21821687054783a92

ஒரு திரைப்படத்திற்காக உடலின் எடையை கூட்டியதால் சினிமா வாய்ப்புகளை இழந்தார். தற்போது அவர் தனது அடுத்த ரவுண்டை துவங்கி விட்டாலும் எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.அதோடு, சினிமாவை தவிர்த்து அவர் செய்த சில மூதலீடுகளாலும் அவருக்கு நஷ்டம் அடைந்திருப்பது தெரியவந்துள்ளது.

ஹைதராபாத்தில் 4 பெட் ரூம் கொண்ட பிளாட் ஒன்றை அவர் வாங்கி வைத்திருந்தார். தெலுங்கானா பிரச்சனை வந்தபோது, சொத்து மதிப்பு குறையும் என யாரோ சொல்லியதை கேட்டு அதை வெறும் ரூ.5 கோடிக்கு விற்றுள்ளார். ஆனால், அதன் தற்போதைய மதிப்பு ரூ.10 கோடிக்கும் அதிகம் எனக்கூறப்படுகிறது.

மேலும், ரியல் எஸ்டேட் தொழிலும் முதலீடு செய்த அவர் விசாகப்பட்டிணத்தில் சில நிலங்களை வாங்கி வைத்திருந்தாராம். ஆனால், அமராவதியை தலைநகராக்க தற்போதை முதல்வர் ஜகன்மோகன் ரெட்டி திட்டமிட்டிருப்பதால் அந்த நிலங்களையும் பாதி விலைக்கு விற்றாராம். ஆனால், விஷாகப்பட்டிணத்தில் உள்ள நிலங்கள் பல கோடிகளுக்கு விற்பனை ஆகிறதாம். அவசரப்பட்டு இப்படி நஷ்டமடைந்து விட்டோமே என அனுஷ்கா புலம்பி வருவதாக டோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

Leave a Comment