மேன் வெர்ச்ஸ் வைல்ட் நிகழ்ச்சியில் ரஜினி பேசியது இதுதான்!..

இந்நிகழ்ச்சியில் தற்போது ரஜினி கலந்து கொண்டுள்ளார். இதற்காக அவர் நேற்று மைசூர் கிளம்பி சென்றார்.  மைசூர் அருகே உள்ள பந்திபுரா புலிகள் காப்பகத்தில் இந்த இந்த ஆவணப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றதாக கூறப்பட்டது. படப்பிடிப்பு குழுவினருடன் ரஜினிகாந்த் நிற்கும் புகைப்படம் ஏற்கனவே வெளியாகியிருந்தது. 

இந்நிலையில், பியர் க்ரில்ஸ் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸ் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் ‘பிரதமர் மோடிக்கு பின் சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் நிகழ்ச்சி…’ எனக்குறிப்பிட்டுள்ளார். அதோடு, அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. அவர் மிகவும் தைரியமானவர்.. Never giveupo' எனக்குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், டிஸ்வரி சேனலும் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் இதுபற்றி செய்து வெளியிட்டுள்ளது. அதில் ‘ பிரதமர் மோடிக்கு பின் ரஜினி எங்களுடன் இணைந்துள்ளார். இது எங்களுக்கு மகிழ்ச்சி. இந்நிகழ்ச்சியில் அவர் நீர் பாதுகாப்பு பற்றி பேசியுள்ளார் என டிவிட் செய்துள்ளது. ரஜினி பலவருடங்களாகவே நதிநீர் இணைப்பு குறித்து ரஜினி பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

Published by
adminram