போலிஸ் வாகனத்தில் ஏறி டிக்டாக் – சிக்கிய இளைஞர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா ?

1c6cd07adde4692a4a64c4d2b7cfe162

தூத்துகுடியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த போலிஸ் வாகனத்தின் மீதேறி டிக்டாக் வீடியோ எடுத்த இளைஞர்களை போலிஸார் கைது செய்து நூதனமான தண்டனை அளித்துள்ளனர்.

டிக்டாக் வீடியோ எடுக்கிறோம் என்ற பெயரில் பலரும் எல்லை மீறுவதும் அடுத்தவரின் மனதைப் புண்படுத்துவதுமான செயல்களில் ஈடுபடுகின்றனர். அதுபோல தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் கோகுலகிருஷ்ணன் (17), செகுவேரா (21), சீனு (17) ஆகிய மூவரும் மில்லர்புரத்தில் உள்ள ஆயுதப்படை முகாம் அருகே நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனத்தின் மீது டிக்டாக் வீடியோ எடுத்து வெளியிட்டனர்.

இந்த வீடியோ போலிஸாரின் கவனத்துக்கு வர, அவர்களைத் தேடி கண்டுபிடித்து கைது செய்தனர் போலீஸார். மாணவர்கள் என்பதால் அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்காமல் போக்குவரத்தைச் சீர் செய்யும் பணியைச் செய்ய வேண்டும் என்று தண்டனை வழங்கியுள்ளார். மேலும் அவர்களுக்கு டிக்டாக் போன்ற செயலிகளின் எல்லையை உணர்ந்து செயலாற்ற வேண்டும் என அறிவுரையும் வழங்கினர்.

 

Related Articles

Next Story