இதை மட்டும் சொல்லுங்க, இந்தியா டிரெண்டிங் கொண்டு வந்துருவோம்: அஜித் ரசிகர்கள்

Published on: January 25, 2020
---Advertisement---

6ca5b22e46fb64629eff879252e2b940

அஜித் நடிப்பில், போனி கபூர் தயாரிப்பில், ஹெச்.வினோத், இயக்கத்தில் உருவாகி வரும் ’வலிமை’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் முடிந்தது. இதனை அடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்றுடன் இந்த படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது

இந்த படத்தில் இரண்டு அல்லது மூன்று கெட்டப்புகளில் அஜித் நடித்து வருவதாகவும் நேற்று முடிந்த படப்பிடிப்பில் ’என்னை அறிந்தால்’ போன்ற கெட்டப்பில் அஜித் இருந்ததாகவும் செய்திகள் கசிந்துள்ளது. மேலும் அடுத்த கட்ட படப்பிடிப்பு வட இந்தியாவில் நடைபெற உள்ளதாகவும் இதற்கான ஆரம்பகட்ட பணிகள் இன்று முதல் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் அஜீத் ரசிகர் ஒருவர் ’வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தேதியை மட்டும் கூறுங்கள். அதை வைத்து நாங்கள் இந்தியாவில் டிரெண்டுக்கு கொண்டு வந்துவிடுவோம் என்று கூறியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள படக்குழுவினர் ’வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தேதி குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று கூறியுள்ளனர். எனவே ’வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என தெரிகிறது

யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகும் ’வலிமை’ படத்தின் நாயகியாக இலியானா நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

Leave a Comment