More

டோலக்பூர்ல கூட படத்தை வாங்க ஆளுருக்குன்னு சொன்னே! – இயக்குனரை கலாய்க்கும் நெட்டிசன்கள்

ஒரு குறிப்பிட்ட சாதியை பெருமைபடுத்தியும், மற்றொரு சாதியை சிறுமைபடுத்தியும் இப்படம் உருவாக்கப்பட்டதால் இப்படத்திற்கு சிலர் ஆதரவாகவும், சிலர் எதிராகவும் கருத்துகளை தெரிவித்தனர்.

Advertising
Advertising

ஆனாலும், குறிப்பிட்ட சாதியை சேர்ந்த பலரும் இப்படத்தை திரையரங்குகளுக்கு சென்று இப்படத்தை பார்த்ததால் இப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. தயாரிப்பாளருக்கு 3 மடங்கு லாபத்தை இப்படம் பெற்றுக்கொடுத்தது.

ஆனால், இப்படத்தில் தொலைக்காட்சி உரிமை இதுவரை விலைபோகவில்லை. இதை இயக்குனர் மோகனே தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஆனால், இப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருந்த போது ‘ இப்படத்தை டோலக்பூரில் வாங்க கூட ஆள் இருக்கு’ என மோகன் டிவிட் செய்திருந்தார்.அப்படி கூறிய மோகனை தற்போது நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

Published by
adminram