தரமான சம்பவம் இருக்கு!… மீண்டும் தலைவருடன் மோதும் தல…

Published On: December 14, 2019
---Advertisement---

fa9956270973e1b0edddeaf6413b0879

இந்த வருடம் பொங்கல் விடுமுறையின் போது அஜித்தின் விஸ்வாசம், ரஜினியின் பேட்ட என இரு திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இதில், பேட்டையை விட விஸ்வாசம் அதிகம் வசூலித்ததால், அப்பட இயக்குனரை அழைத்த ரஜினி தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்துள்ளார்.

இது ஒருபுறம் இருக்க, சிவாவின் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. அதேபோல், வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பும் விரைவில் துவங்கவுள்ளது. இரு படங்களையும் அடுத்த தீபாவளிக்கு வெளியிட இரு பட தயாரிப்பு நிறுவனங்களும் முடிவு செய்துள்ளதாம்.

எனவே, இந்த முறை யாருடை படம் ரசிகர்களை பெரிதும் கவரும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Leave a Comment