தனுஷின் ‘பட்டாஸ்’ படத்தின் டிராக் லிஸ்ட் ரிலீஸ்: நாளை இசை வெளியீடு

தனுஷ் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி ஏற்பட்டால் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெற இருக்கும் நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது இந்த படத்தில் மொத்தம் ஏழு பாடல்களை இசையமைப்பாளர் விவேக் மெர்வின் அவர்கள் கம்போஸ் செய்துள்ளார் இந்த பாடல்களின் விபரங்கள் பின்வருமாறு:

1. புதுசூரியன் என்ற பாடலை உமாதேவி எழுதியிருக்க அதனை அனிருத் பாடியுள்ளார்.

2. சில்புரோ என்ற பாடலை தனுஷ் பாடியிருக்க, விவேக் மெர்வின் எழுதியுள்ளனர்.

3. ஜிகிடி கில்லாடி என்ற பாடலை விவேக் எழுதியிருக்க, அனிருத் பாடியுள்ளார்.

4. மொரட்டு தமிழண்டா என்ற பாடலை விவேக் எழுதியிருக்க விவேக் சிவா,மெர்வின் சாலமன் பாடியுள்ளனர்.,

5. பிரியாதே என்னை என்ற பாடலை கார்த்திக் எழுத, விஜய் ஜேசுதாஸ், நிரஞ்சனா ஆகியோர் பாடியுள்ளனர்.

6. எ மதர்ஸ் லவ்’ என்ற பாடல் தீம் பாடலாக உருவாகியுள்ளது.

7. மவனே’ என்ற பாடலை அறிவு எழுதியிருக்க அறிவு மற்றும் விவேக் சிவா பாடியுள்ளனர்.

இந்த டிராக் லிஸ்ட்டில் இந்த படத்தில் அனிருத் இரண்டு பாடல்களை பாடியுள்ளார் என்பது புதிய செய்தி ஆகும்

Published by
adminram