தென்னிந்தியாவில் உருவானப் படம் ஒன்று முதல்முறையாக சீனாவின் மாண்டரின் மொழியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு மோகன்லால், மீனா ஆகியோரின் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியாகி திருஷ்யம் திரைப்படம் மிகப்பெரும் வெற்றியைப் பெற்று மல்லுவுட்டின் முதல் 100 கோடி சினிமா என்ற புகழைப் பெற்றது. இதையடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்ப்ட்டு வெற்றி பெற்றது. ஆனால் ஹிந்தியில் மட்டும் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. எல்லா மொழி ரீமேக்குகளிலும் அந்த பிராந்தியத்தின் முன்னணி நடிகர்கள் ஆர்வமாக நடித்தனர்.
இந்நிலையில் இப்போது சீனாவின் மாண்டரின் மொழியில் த்ருஷ்யம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. எ ஷீப் வித்தவுட் எ ஷெப்பர்டு' சீனாவின் முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். வரும் 20 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. வழக்கமாக இந்தியப் படங்கள் சீனாவில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகும், ஆனால் மலையாள படம் ஒன்று சீனாவில் ரீமேக் ஆவது இதுவே முதல்முறை.
Sivakarthikeyan: இசை…
ஜெயம் ரவி…
நடிகை கஸ்தூரி…
சினிமா செலிப்ரட்டிகளுக்கு…
தற்போது விஜய்…