இன்னும் 18 வயசு புள்ள மாதிரியே இருக்கியே!… திரிஷாவின் புது ஃபிட்னஸ் ரகசியம்…

மிஸ் சென்னை அழகியாக பட்டம் பெற்றவர் திரிஷா. தமிழ் சினிமாவில் ‘லேசா லேசா’ படம் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். ஆனால், அதன்பின் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்தது என்னவோ கில்லிதான். இந்த வெற்றிக்கு பின் திரிஷா காட்டில் அடை மழைதான். விக்ரமுக்கு ஜோடியாக நடித்த ‘சாமி’ திரைப்படமும் மெஹா ஹிட் அடிக்க அம்மணி முன்னணி நடிகை ஆனார். 

எனவே, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். தமிழில் விஜய்,அஜித்,ரஜினி, கமல் என அனைத்து நடிகர்களுடனும் ரவுண்ட் கட்டி நடித்தார். கடந்த சில வருடங்களாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் அவ்வளவு ஆக்டிவாக இல்லாத அவர் டிவிட்டரில் மட்டும் அவ்வப்போது சில கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், உடல் பிட்னஸுக்காக சைக்கிள் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட அவர் முடிவெடுத்துள்ளார். எனவே, சைக்கிளில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘ச்ச இன்னும் 18 வயசு புள்ள மாதிரியே இருக்கீங்களே’ என பதிவிட்டு வருகின்றனர்.
 

Published by
adminram