More

திரிஷா இந்த ஜாதி பொண்ணு அதனால் தான் சினிமா வாய்ப்பு குவியுது – மீரா மிதுன்!

அந்த விவகாரத்தில் சர்ச்சை நடிகையாக பிரபலமான மீராவிற்க்கு பிக்பாஸில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்து. ஆனால், அங்கு சக போட்டியாளர்களுடன் சண்டை வாக்குவாதம் என மக்களிடையே அவப்பெயரை சமபதித்த மீரா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். வெளியில் வந்தும் தற்ப்போது வரை விடாமல் தொடர்ந்து எதாவது பிரச்னை செய்து சர்ச்சை கிளப்பி ட்ரெண்டாகி வருகிறார்.

Advertising
Advertising

அண்மையில் மீரா மிதுன் நடிகை த்ரிஷாவை விமர்சித்து ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்டார் . அதில்,  இதுதான் பதிவு கடைசி எச்சரிக்கை திரிஷா…  அடுத்த முறை என்னுடைய உருவத்தையோ அல்லது என்னுடைய முடியையோ பயன்படுத்தி என்னை போல இருக்க வேண்டும் என்று போட்டோ ஷாப் செய்தால் நீங்கள் சட்ட ரீதியாக பிரச்னையை சந்திப்பீர்கள் என்று முட்டாள் தனமாக பதிவிட்டு அனைவரின் கிண்டலுக்கும் கோபத்திற்கும் ஆளாகினார்.

அதையடுத்து தற்ப்போது மீண்டும் திரிஷாவை குறித்து அபாண்டமாக விமர்சித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.  அதில், திரிஷா இத்தனை ஆண்டுகள் சினிமாவில் நிலைத்து இருக்க காரணம் அவரின் ஜாதி தான். த்ரிஷாவின் அப்பா ஒரு உயர் ஜாதியினர் என்பதால் தான் திரிஷாவிற்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.  ஜாதி பாகுபாட்டினால் தான் நேபோட்டிசம் வருகிறது என மீரா மிதுன் காட்டமாக பேச எப்போதும் போலவே இதையும் ட்ரோல் செய்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.

Published by
adminram

Recent Posts