Connect with us

பொன்னியின் செல்வன் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து புகைப்படத்தை கசிய விட்ட த்ரிஷா

பொன்னியின் செல்வன் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து புகைப்படத்தை கசிய விட்ட த்ரிஷா

பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் நடிகை த்ரிஷா பகிர்ந்துள்ளார்.�

aac0a9663d676ddce380f1030f1fba61

லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயரம், லால், ரஹ்மான் ஆகியோர் நடிக்கிறார்கள். சமீபத்தில் படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தின் முதல் பாகம் அடுத்த வருடம் திரைக்கு வர இருக்கிறது.

78a42d331a8c8e48f5d4fc2dcc461e26-2

புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாக கொண்டு, அதே பெயரில் “பொன்னியின் செல்வன்” படத்தை இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார். 

b31f181ba45ac50feeff9ee2d17b7512-1-3

இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிகிறார். ரவி வர்மன் isc இப்படத்திற்கான ஒளிப்பதிவு செய்கிறார்.

d50178133819f2daeae3240f5715c507-3

முழு வீச்சில் நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பல நகரங்களில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் பல கட்ட படப்பிடிப்புகள் பாண்டிச்சேரி, ஐத்ராபாத் நகரங்களில் முடிந்த பின், தற்பொழுது படக்குழு மத்திய பிரதேசத்தில் உள்ள ஆர்ச்சா நகருக்கு சென்றுள்ளது. 

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் நடிகை த்ரிஷா பகிர்ந்துள்ளார். அதில் ஆர்ச்சா கோயிலின் விமானத்துடன் இணைந்து படப்பிடிப்பு கேமராவை படம் பிடித்துள்ளார். 

Continue Reading
To Top