Connect with us

38 வயதில் திருமணத்திற்கு ரெடியான பிரபல நடிகை!

38 வயதில் திருமணத்திற்கு ரெடியான பிரபல நடிகை!

1999ம் ஆண்டு மிஸ் மெட்ராஸ் பட்டம் வென்ற த்ரிஷா, அதே வருடம் பிரசாந்தின், ஜோடி படத்தில் சிம்ரனுடன் சுற்றும் தோழிகளில் ஒருவராக சினிமாவில் அறிமுகம் ஆனார். பின்னர் மௌனம் பேசியதே, சாமி, லேசா லேசா என ஆரம்பித்த இவர் இன்று தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக உள்ளார்.

3b29482dfdaf87f5f738bd5b11074226

1999ம் ஆண்டு மிஸ் மெட்ராஸ் பட்டம் வென்ற த்ரிஷா, அதே வருடம் பிரசாந்தின், ஜோடி படத்தில் சிம்ரனுடன் சுற்றும் தோழிகளில் ஒருவராக சினிமாவில் அறிமுகம் ஆனார். பின்னர் மௌனம் பேசியதே, சாமி, லேசா லேசா என ஆரம்பித்த இவர் இன்று தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக உள்ளார்.

சமீபகாலமாக இவர் நடிப்பில் வெளியான எந்த ஒரு படங்களும் சரியாக வெற்றி பெறவில்லை. எனவே நயன்தாரா தேர்வு செய்வது போலவே த்ரிஷாவும் சோலோ நாயகி படங்களை தேர்வு செய்து நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார். ரஜினி, கமல் விஜய், அஜித், விக்ரம், சூர்யா போன்ற முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த த்ரிஷா, சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து வருகிறார்.

4ad6e8f165c09235747424051dac5593
Trisha

தற்போது இவர் கைவசம், பொன்னியின் செல்வன், சதுரங்க வேட்டை 2,ராங்கி, கர்ஜனை ஆகிய படங்கள் உள்ளன. இதில் பொன்னியின் செல்வன் படத்தை தவிர மற்ற இரண்டு படங்களும் படப்பிடிப்பு முடிந்து வெளியாக தயாராகியுள்ளது.

இதன்பின் நடிகை த்ரிஷா வேறு எந்த புதிய படங்களிலும் கமிட்டாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகை த்ரிஷாவிற்கு விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

1716c8501d04a571915cf44814f0f6c2
Trisha

இதன் காரணமாக தான், நடிகை த்ரிஷா, புது படங்களில் கமிட்டாகவில்லை என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறியதாக தகவல் தெரிவிக்கின்றனர். எது எப்படியோ இப்போதாவது கல்யாணம் பண்ணுனா சரிதான் என்கிறார்கள் ரசிகர்கள்.

Continue Reading
To Top