‘96’ ராம் உடன் மீண்டும் இணைந்த த்ரிஷா!

Published on: January 17, 2020
---Advertisement---

fe59591991b77183ad573988c34c621d-2

விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த ‘96’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் இடம் பெற்ற ராம், ஜானு ஆகிய இரண்டு கேரக்டர்கள் படம் பார்த்த ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நடந்து இருக்கும் என்பதால் இந்த படத்தை பார்வையாளர்கள் தங்களுடைய சொந்த வாழ்க்கை வரலாற்றை பார்த்தது போலவே பார்த்ததால் மிகப்பெரிய வெற்றி பெற்றது 

இந்த நிலையில் த்ரிஷாவின் அடுத்த படத்திலும் ‘96’ படத்தின் கேரக்டர் இணைந்துள்ளது தற்செயலாக இணைந்துள்ள செய்தி தற்போது வெளியாகியுள்ளது. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிக்க உள்ள மலையாள படத்தின் டைட்டில் ராம் என்று வைக்கப்பட்டுள்ளது என்பதும் இந்தப் படத்தின் நாயகியாக த்ரிஷா நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த படத்தில் த்ரிஷா டாக்டராக நடிக்க உள்ளார். ஏற்கனவே த்ரிஷா ’சர்வம்’ மற்றும் ‘பரமபத விளையாட்டு ஆகிய படங்களில் டாக்டராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளதாகவும் அடுத்தகட்ட படப்பிடிப்பு பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

Leave a Comment