ரத்தம் சொட்ட சொட்ட ஆக்ரோஷமாக திரிஷா – புதிய பட போஸ்டர் லீக்

நடிகை திரிஷா தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அப்படி அவர் தற்போது நடித்து வரும் திரைப்படம்தான் ‘குற்றப்பயிற்சி’. இப்படத்தில் அதிரடியான சண்டை காட்சிகளில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இப்படத்தை வெர்னிக் என்பவர் இயக்கி வருகிறார். ஜி. விவேகானந்த தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் த்ரிஷா ரத்தம் சொட்ட சொட்ட ஆக்ரோஷமாக கத்தும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by
adminram