ஜோடி படத்தில் நடிகை சிம்ரனின் தோழியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை த்ரிஷா. நடிக்க வரும் முன்னர் இவர் மிஸ் சென்னை டைட்டில் வென்றிருந்தார். ஜோடி படத்தையடுத்து லேசா லேசா படத்தில் முதன்முறையாக நாயகியாக நடித்திருந்தார்.
இதன் வெற்றியைத் தொடர்ந்து மௌனம் பேசியதே, மனசெல்லாம், சாமி ஆகிய படங்களில் நடித்தார். பின்னர் இவர் நடித்த கிள்ளி படம் மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து முன்னணி நடிகையாக உருவெடுத்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார் இவர்.
கடந்த சில வருடங்களாக இவர் நடிப்பில் வெளியான படங்கள் சரியாக ஓடவில்லை. இதையடுத்து நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேடி தேடி நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடித்திருந்த ‘பரமபதம்’ ஓடிடி-யில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
தற்போது இவர் மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு மத்திய பிரதேசம் மற்றும் வடஇந்தியாவின் சில பகுதிகளில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நர்மதா நதிக்கரையிலுள்ள ராணி அகில்யா பாய் கோட்டை, அரண்மனை மற்றும் சிவன் கோவில்களிலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
நர்மதை நதிக்கரையில் பல சிவலிங்கத்தின் சிலைகள் மற்றும் நந்தியின் சிலைகள் உள்ளன. இங்கு கார்த்தி மற்றும் ரகுமானுடன் த்ரிஷா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டது. அப்போதே அவர் கால்களில் செருப்பு அணிந்தபடியே அந்த சிலைகளின் நடுவே நடந்து சென்றார்.
இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. த்ரிஷாவின் செயல் சிவலிங்கம் மற்றும் இந்துக்களை அவமானப்படுத்தும் வகையில் உள்ளது. எனவே த்ரிஷா மற்றும் மணிரத்னம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து வித்யா மண்டல் அமைப்பினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில்…
பொதுவாக பொங்கல்,…
இறுதிச்சுற்று சூரரைப்போற்று…
தமிழ் சினிமாவில்…
சமீபகாலமாகவே தமிழில்…