ஒரு டிவிட் போதும்…படத்தையே காலி பண்ணிடுவேன்.. தயாரிப்பாளரை மிரட்டும் திரிஷாவின் தாய்

Published on: February 25, 2020
---Advertisement---

d8eb45607befdec84d820ce5239e0cbf

நடிகை திரிஷா மருத்துவராக நடித்துள்ள திரைப்படம் பரமபதம் விளையாட்டு. இப்படத்தை 24 ஹவர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை திருஞானம்  என்பவர் இயக்கியுள்ளார் இப்படம் வருகிற 28ம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தின் புரமோஷன் விழா சமீபத்தில் சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது. இந்த விழாவில் திரிஷா கலந்து கொள்ளவில்லை. இது படக்குழுவினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

8ec29aea49a59137893c9a9008a26466-1

இந்த விழாவில் பேசிய தயாரிப்பாளர் டி.சிவா ‘இந்த விழாவுக்கு திரிஷா வரவில்லையென்பது வருத்தத்திற்குரிய விஷயம். தொடர்ந்து அவர் விளம்பரத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்காவிட்டால் சம்பளத்தில் இருந்து ஒரு பகுதியை தயாரிப்பாளருக்கு திருப்பித்தர வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பாக எச்சரிக்கை விடுக்கிறேன் என்றார்’ என பேசியிருந்தார்.

இந்த விவகாரம் திரிஷா தரப்புக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் திரிஷாவின் தாய் ஒரு ஆடியோவை வெளியிட்டிருந்தார். அதில் என் பொண்ணு திரிஷா பிசியாக இருக்கிறார். தொடர்ந்து பல பட வேலைகளில் மூழ்கியுள்ளார். அதனால் அவர முடியவிலை. அவர் பெயரை கெடுக்கும் விதத்தில் நடந்து கொண்டால் படத்தையே காலி செய்து விடுவேன். ஒரு டிவிட் போட்டால் போதும்’ என தயாரிப்பாளரை மிரட்டும் தொனியில் பேசிய ஆடியோ வெளியானது.

இத்தனைக்கும், புரமோஷன் விழாக்களில் கலந்து கொள்வேன் என ஒப்பந்தத்தில் கையெழுத்துவிட்டுதான் திரிஷா இப்படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment