ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய இளம்வீரருக்கு மீண்டும் சிக்கல் !

இந்திய அணியின் வளரும் நட்சத்திரமாக உருவாகிவந்த பிருத்வி ஷா தோல்பட்டை காயம் காரணமாக இந்திய ஏ அணிக்கு விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது.

19 வயதான பிருத்வி ஷா இந்திய அணிக்காக விளையாடிய முதல் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினர். அதையடுத்து இந்திய அணியில் நிரந்தர இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

அதன் பின்னர் அவருக்கே தெரியாமல் அவர் சாப்பிட்ட இருமல் மருந்தில் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து இருந்ததால் ஒரு ஆண்டு காலம் தடை செய்யப்பட்டார். தடை  முடிந்து மீண்டும் இந்திய ஏ அணிக்காக சிறப்பாக விளையாடி வந்த அவர், இப்போது மீண்டும் தோல்பட்டை காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். கடந்த வாரம் கர்நாடகாவுக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் ஓவர் த்ரோ ஒன்றை தடுக்கும் முயற்சியில் இடது தோள்பட்டைக் காயமடைந்தார் பிரிதிவி ஷா.

Published by
adminram