
கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, வித்யூத் ஜாம்வால், விவேக் உட்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே சென்னை, ஹைதராபாத், ராஜஸ்தான் உள்ளிட்ட இந்தியாவின் சில பகுதிகளில் நடந்து முடிந்துள்ள நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடத்த படக்குழு திட்டமிட்டிருந்தது. குறிப்பாக சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் மார்ச் இறுதியில் படப்பிடிப்பு நடத்த இயக்குநர் ஷங்கர் திட்டமிருந்ததாகவும் கூறப்பட்டது.
ஆனால் தற்போது சீனா மட்டுமின்றி தாய்லாந்திலும் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதால் தற்போது இரு நாடுகளுக்குமே படப்பிடிப்புக்காக செல்ல முடியாத நிலை உள்ளது.
இதனையடுத்து சீனாவுக்கு பதில் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பை இத்தாலியில் வைத்து கொள்ளலாம் என படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் விரைவில் இத்தாலிக்கு படக்குழுவினர் செல்லவிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அதேபோல் தாய்லாந்தில் எடுக்க வேண்டிய காட்சிகளுக்கு பதில் இலங்கையில் படமாக்க ஷங்கர் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது