உண்மையான காதல்.. உன்னை மிஸ் செய்தேன்.. . தனுஷ் உருக்கம்...
தனுஷ் நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முக திறமை உடையவர். இவர் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக செய்திகள் வெளியானது. மேலும், கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
கொரோனா பரவல் காரணத்தால் கடந்த 5 மாதங்களாக படப்பிடிப்புகள் நடைபெறவில்லை. சில நாட்களுக்கு முன்பு சினிமா படப்பிடிப்பிற்கு அரசு அனுமதி அளித்தது.
இதைத்தொடர்ந்து, 5 மாதங்கள் கழித்து பாலிவுட்டில் அக்ஷய்குமார் நடிக்கும் ‘அத்ராங்கி ரே’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பில் தனுஷ் கலந்து கொண்டார். இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் அவர் நடிக்கவுள்ளார்.
நீண்ட நாட்களுக்கு பின் கேமராவை பார்த்த சந்தோஷத்தில் கேமரா மீது தலையை சாய்த்தபடி தான் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு ‘உண்மையான காதல்.. உன்னை மிஸ் செய்தேன்’ என தனுஷ் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
View this post on InstagramONE TRUE LOVE ❤❤❤ missed you so much
A post shared by Dhanush (@dhanushkraja) on