விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’ - டிரெய்லர் அப்டேட்
தமிழ் சினிமாவில் அதிக திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் விஜய் சேதுபதி. டெல்லி பிரசாத் தீனதயாளன் என்பவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் துக்ளக் தர்பார். இப்படத்தில் ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், பார்த்திபன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சி பெற்றுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோ ஆகஸ்டு 31ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
#TughlaqDurbarTrailer from 31st August.@DDeenadayaln @7screenstudio @RaashiiKhanna_ @mohan_manjima @rparthiepan #GovindVasantha @manojdft @samyuktha_shan @thinkmusicindia @SunTV @Netflix_INSouth @proyuvraaj pic.twitter.com/AGBlBGyiB9
— VijaySethupathi (@VijaySethuOffl) August 27, 2021