வீட்டில் இறந்து கிடந்த டிவி பிரபலம் ; கடைசியாக போட்ட பேஸ்புக் பதிவு : ரசிகர்கள் அதிர்ச்சி

கேரளாவில் ரோஸ்பவுல் என்கிற தொலைக்காட்சியில் ஜாகீ’ஸ் குக்புக் (Jagee's Cookbook) என்கிற நிகழ்ச்சியை நடத்தி வந்தவர் ஜாகி ஜான் (Jagee john). இவர் திருவனந்தபுரத்தில் தனது அம்மாவுடன் வசித்து வந்தார். 

இந்நிலையில், வீட்டின் சமையலறையில் நேற்று இரவு அவர் இறந்து கிடந்தார். அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரின் மரணம் குறித்தும் விசாரணை செய்து வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் நேற்று காலை தனது முகநூலில் ‘2019ம் ஆண்டில் நீங்கள் அழுத கண்ணீர்  2020ம் ஆண்டு விதைக்கும் செடிக்கு தண்ணீராக இருக்கும்’ என சோகமாக பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் திடீர் மரணம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published by
adminram