மிஷ்கின் முன் மோதிக்கொண்ட இரண்டு நடிகைகள்: படப்பிடிப்பில் பரபரப்பு

Published on: January 27, 2020
---Advertisement---

709b657afcde10bbc64408e07f61005b

அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை ஒரு படத்தில் இரண்டு கதாநாயகிகள் என்றாலே அந்த இரண்டு நாயகிகளுக்கு இடையே ஏற்படும் பிரச்சனையை தீர்த்து வைக்கவே இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு போதும் போதும் என்றாகிவிடும். இதற்கு பல உதாரணங்கள் கோலிவுட் திரையுலகில் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் மிஸ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் ’துப்பறிவாளன் 2’ படத்தில் ஆண்ட்ரியா மற்றும் அனு அகர்வால் ஆகிய இரண்டு நாயகிகள் நடித்து வருகின்றனர். சமீபத்தில் நடந்த இந்த படத்தின் படப்பிடிப்பின்போது எஸ்கலேட்டரில் இருவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பது போல் ஒரு காட்சியை மிஷ்கின் படமாக்கிக் கொண்டிருந்தார். அப்போது ஆண்ட்ரியா ஜீன்ஸ் மற்றும் டீசர்ட் அணிந்து இருந்ததால் அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அனு அகர்வால் குர்தா அணிந்து இருந்ததால் அவரை கவனமாக உட்காரும்படி ஆண்ட்ரியா கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அனு அகர்வால் ’எனக்கு எல்லாம் தெரியும் உன் வேலையை பாரு’ என்று கூறியதாகவும் அதற்கு ஆண்ட்ரியா பதிலுக்கு ஏதோ கூற இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது

இந்த பிரச்சனையை பஞ்சாயத்து செய்து படப்பிடிப்பை நடத்துவதற்குள் இயக்குனர் மிஷ்கினுக்கு போதும் போதும் என்றாகி விட்டதாகதாகவும், டப்பிடிப்பு முடிந்த பின்னர் அனுவை தனியே அழைத்து திட்டியதாகவும் ஆண்ட்ரியா ஒரு அனுபவம் உள்ள நடிகை அவர் உனக்கு நல்லது தான் கூறினார் நீ ஏன் கோபப்படுகிறாய் என்று அவர் கூறியதாகவும் ஆனால் அவர் சமாதானம் அடையாததால் அவர் மண்டையில் ஓங்கி எதையாவது கொண்டு அடிக்க வேண்டும் போல் இருந்தது என்றும் மிஷ்கின் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கூறியிருந்தார் 

ஆனால் அதே நேரத்தில் சைக்கோ திரைப்படத்தில் நித்யா மேனன் மற்றும் அதிதி ராவ் ஹைத்ரி ஆகிய இருவருக்கும் இடையே ஒரே ஒரு காட்சி மட்டுமே இருந்ததால் அந்த படத்தில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் தான் தப்பித்துக் கொண்டதாகவும் அந்த பேட்டியில் மிஷ்கின் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment