தலையில் இரண்டு குண்டுகள் ! 7 கிலோ மீட்டர் சென்று மருத்துவமனையில் சேர்ந்த பெண் !!

பஞ்சாப் மாநிலத்தில் சொத்து தகராறு காரணமாக தலையில் சுடப்பட்ட பெண் ஒருவர் 7 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த மருத்துவமனைக்கு சென்று தனது உயிரைக் காப்பாற்றிக்கொண்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 42 வயது பெண்மணி சுமித் கவுர். இவருக்கு ஒரு சகோதரர் உள்ளார். கவுரின் தந்தை இறந்த போது அவருக்கு 16 ஏக்கர் நிலத்தை எழுதி வைத்துள்ளார். அதை சுமித் கவுரின் சகோதரர் மற்றும் அவரது மகன் ஆகியோர் அபகரிக்க முயன்றுள்ளனர்.

இதற்கு சுமித் ஒத்துக் கொள்ளாததால் அடிக்கடி அவரிடம் சண்டை போட்டுள்ளனர். இதையடுத்து ஒரு நாள் இதுசம்மந்தமான வாக்குவாதத்தில் சும்தி கவுரை அவர்கள் துப்பாக்கியால் தலையில் சுட்டுள்ளனர். இதில் அவர் முகம் மற்றும் தலையில் குண்டு பாய்ந்துள்ளது. குண்டுகள் தலையில் இருந்த படியே அவர் 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சைப் பெற்று உயிரைக் காப்பாற்றியுள்ளார். இந்த சம்பவமானது பஞ்சாப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by
adminram