More

அஜித்திடம் கதை சொன்ன இரு இயக்குனர்கள்… அதில் ஒருவருக்கு சம்மதம் –அறிவிப்பு எப்போ?

நடிகர் அஜித் சமீபத்தில் தமிழ் இயக்குனர்கள் இருவரிடம் கதை கேட்டு அதில் ஒருவர் சொன்ன கதைக்கு ஓகே சொல்லியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertising
Advertising

அஜித் எப்போதும் ஒரு படத்தை முடித்த பின்னரே அடுத்த படத்துக்காக கதைக் கேட்க ஆரம்பிப்பார். ஆனால் இந்த லாக்டவுன் இப்போது அவரையே மாற்றியுள்ளது. லாக்டவுன் காரணமாக குடும்பத்தோடு நேரத்தை செலவழித்து வரும் அவர் இப்போது கதைக் கேட்க ஆரம்பித்துள்ளார்.

இதற்காக இரு தமிழ் இயக்குனர்கள் அஜித்தை அவர் வீட்டில் சந்தித்து கதை சொல்லியுள்ளனர். அதில் ஒரு இயக்குனர் சொன்ன கதை அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இன்னும் சில நாட்களில் அந்த இயக்குனர் யார், அந்த படத்தைத் தயாரிக்கப்போகும் தயாரிப்பாளர் யார் என்ற விவரம் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.

Published by
adminram