More

ஒரே பாடலில் இரு படங்கள்… பாடலில் பிறந்த படங்களின் வரலாறு

படத்தின் ஏதாவது ஒரு பிரபலமான பாடலில் இருந்து மற்றொரு படத்தின் தலைப்பை வைப்பார்கள். அப்படிப்பட்ட படங்கள் தமிழ்சினிமாவில் ஏராளமாக வந்துள்ளன.  நான் ஆணையிட்டால்…என்று எம்ஜிஆர் எங்க வீட்டுப்பிள்ளை படத்தில் பாடியிருப்பார். இப்படம் 1965ல் எம்.ஜி.ஆர்., சரோஜா தேவி நடிப்பில் வெளியானது. இந்தப்படத்தின் இயக்குனர் தபி சாணக்யா. 

Advertising
Advertising

நான் ஆணையிட்டால் என்று 1966ல் எம்.ஜி.ஆர்., கே.ஆர்.விஜயா, சரோஜா தேவி நடிப்பில் தபி சாணக்யா இயக்கத்தில் இப்படம் வெளியானது. 2017ல் ராணா டகுபதி, காஜல் அகர்வால் நடிப்பில் நான் ஆணையிட்டால் படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் இந்தப்பாடல் டபுள் படங்களைத் தந்துள்ளது.

அம்மன்கோவில் கிழக்காலே என்று சகலகலாவல்லவனில் கமல்ஹாசனின் அறிமுகப்பாடல் வரும். இப்படம் 1982ல் கமல்ஹாசன், அம்பிகா, வி.கே.ராமசாமி நடிப்பில் வெளியானது. இப்படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கினார். மாபெரும் வெற்றி பெற்ற படம் இது. இந்தப்படத்தின் அறிமுகப்பாடலை எடுத்து அம்மன் கோவில் கிழக்காலே என்று 1986ல் விஜயகாந்த், ராதா, செந்தில், ஸ்ரீவித்யா ஆகியோர் நடித்த படம் வெளியானது. இப்படத்தை ஆர்.சுந்தர்ராஜன் இயக்கினார். நடித்த படம் உருவாகி விட்டது. 

அதே போல் எங்கிட்ட மோதாதே நான் ராஜாதி ராஜனடா என ரஜினிகாந்த் நடித்த ராஜாதி ராஜா படத்தில் வரும். இப்படம் 1989ல் ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியானது. இப்படத்தில் ரஜனிகாந்த், நதியா, ஜனகராஜ், ராதாரவி ஆகியோர் நடித்தனர்.1990ல் வெளியான எங்கிட்ட மோதாதே படத்தில் விஜயகாந்த், ஷோபனா ஆகியோர் நடித்தனர். இப்படத்தை ஆர்.சுந்தர்ராஜன் இயக்கினார். 

என்னைத் தாலாட்ட வருவாளா…2003ல் வந்த அஜீத் படமாகி விட்டது. இந்தப்படத்தில் விக்னேஷ், ரேஷ்மா உள்பட பலர் நடித்து இருப்பார்கள். படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிந்திரன். இந்தப்பாடல் இடம்பெற்ற படம் 1997ல் வெளியான விஜய் நடிப்பில் உருவான காதலுக்கு மரியாதை படத்தில் இடம்பெற்றது. உனக்கென்ன வேணும் சொல்லு…பாடல் அஜீத் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் படத்தில் வரும். பின்னர் 2015ல் உனக்கென்ன வேணும் சொல்லு என்ற படம் வெளியானது. இதில் ஜக்லீன் பிரகாஷ், தீபக் பரமேஷ் மற்றும் மைம் கோபி உள்பட பலர் நடித்துள்ளனர்.

படம் ஒருகல் ஒரு கண்ணாடி என்று ஒருபடம் வந்துள்ளது. இதில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க ராஜேஷ் இயக்கத்தில் வெளியான படம். இவருடன் சந்தானம், ஹன்சிகா ஆகியோரும் நடித்தனர். இது ஒரு நகைச்சுவைப்படமாக உருவானது. ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார்.

இந்தப்படத்தின் பெயரானது ஒரு கல் ஒரு கண்ணாடி 2009ல் வெளியான சிவா மனசுல சக்தி என்ற படத்தில் இடம் பெற்றிருக்கும். இ;ப்படத்தில் ஜீவா, அனுயா, சந்தானம், சத்யன் ஆகியோர் நடித்தனர். இப்படத்தின் இயக்குனர் ராஜேஷ். இவருக்கு முதல் படம் இதுதான். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

நினைத்தது யாரோ…நீ தானே என்று ஒரு பாடல் பாட்டுக்கு ஒரு தலைவன் படத்தில் வந்தது. இது 1989ல் வெளியான விஜயகாந்த் நடித்த படம். இந்தப்படத்தில் ஷோபனா, நம்பியார் மற்றும் கே.ஆர்.விஜயா ஆகியோர் நடித்தனர். இப்படத்தை லியாகத் அலிகான் இயக்கினார். 2014ல் நினைத்தது யாரோ என்று இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் படம் வெளியானது. இப்படத்தில் ரஜித் மேனன், நிமிஷ சுரேஷ், கார்த்திக் யோகி, அசார் ஆகியோர் நடித்தனர். 

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என்ற படம் 2019ல் இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் வெளியானது. இப்படத்தில் ஷிரின் காஞச், ரியோராஜ், நாஞ்சில் சம்பத் ஆகயோர் நடித்தனர். இப்படம் 1970ல் வெளியான என் அண்ணன் படத்தில் இடம்பெற்ற பாடலான நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா என்ற பிரபல பாடலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா உள்பட பலர் நடித்தனர். இந்தப்படத்தின் இயக்குனர் ப.நீலகண்டன். இந்தப்பாடலை பாடியவர் டிஎம்.சௌந்தரராஜன்.

Published by
adminram

Recent Posts